2024 ஆம் ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 தொடரின் வீரர்கள் ஏலம் நாளை (20) மதியம் 12 மணிக்கு கொழும்பிலுள்ள நட்சத்திர விருந்தகம் ஒன்றில் குறித்த ஏலம் இடம்பெறவுள்ளது.
குறித்த ஏலத்தில் 420 பேர் பங்கேற்கவுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.
இந்த ஏலத்தில் 154 இலங்கை வீரர்களுடன் 266 வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டிற்கான லங்கா ப்ரீமியர் லீக் தொடருக்கான ஏலத்திற்கு 600ற்கும் அதிகமான வெளிநாட்டு வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும், 266 வீரர்களே தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தொடரின் பணிப்பாளர் சமந்த தொடங்வெல தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇