இலங்கையில் தற்போது இன்புளுவென்சா வைரஸ் காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருவதாக பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசேட அவதானம் செலுத்துமாறும் அவர் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளார்.
2 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோரை அதிக அவதானத்துடன் செயற்படுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
காய்ச்சல், இருமல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்படுமாயின் உடனடியாக அரச வைத்தியர் ஒருவரை நாடுமாறும் பொரளை சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇