உற்பத்தி மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக கொரிய மொழியில் நடத்தப்பட்ட பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.குறித்த பரீட்சைக்கு 3,580 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை இம் மாதம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதற்கான நேர்முகப்பரீட்சை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் மாகாண அலுவலகங்கள், மற்றும் பயிற்சி நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
இதற்கான நேர்முகத்தேர்வுகள் எதிர்வரும் ஜூன் மாதம் 6, 7 மற்றும் 10 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇