மட்டக்களப்பு மாவட்டத்தில் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கிளீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் தொடர்பாக மாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

கீளின் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் பிரதான மூன்று விடயங்களான சமூக அடிப்படை, சுற்றாடல் அடிப்டை மற்றும் நெறிமுறை அடிப்படையிலான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்களை மாவட்ட
செயலனியினரின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

கீளின் ஶ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள ஐந்தான்டு வேலைத்திட்டம் தொடர்பான விரிவான தெளிவூட்டல்கள் இதன் போது வழங்கப்பட்டது.

வளமான நாடு அழகான தேசம் எனும் தொனிப்பொருளை அடைவதற்கு அனைத்து திணைக்களங்களும் ஒன்றினைந்து நடைமுறைப்படுத்த வேண்டிய திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், முப்படை உயர் அதிகாரிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects