பலத்த மழைவீழ்ச்சி , கடும் காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் தொடரிபில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.
இதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளில் செயற்படும் மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் மிகவும் அவதானமாக இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிக்கின்றது.
நாளை (25.05.2024) அதிகாலை 5.30 மணிக்கு தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து மத்திய வங்கக்கடலில் புயலாக உருவாகக்கூடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அது பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை இரவு 11.30 மணியளவில் புயலாக மாறக்கூடும்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் கடும் காற்று மற்றும் பலத்த மழை பெய்யக்கூடும்
இதேவேளை, கடற்பரப்புகளும் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇