களனிகங்கை , களுகங்கை, கிங் கங்கை மற்றும் நில்வலா கங்கை ஆகிய ஆறுகளில் இன்று (27.05.2024) காலை நிலவரப்படி அதிக நீர் மட்டம் பதிவாகியுள்ளதாக நீர்ப்பாசனம், நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் எஸ். பி. சி. சுகீஸ்வரா கூறுகிறார்.
இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட ஆறுகளை அண்மித்த தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தின் தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் இன்று காலை 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. வினாடிக்கு சுமார் 7000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.
குக்குலே கங்கை அனல்மின் நிலைய நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளும் திறக்கப்பட்டு வினாடிக்கு சுமார் 80 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் குடா கங்கையின் நீர் மட்டம் உயரக் கூடும் எனவும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇