மட்டக்களப்பில் வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டமானது மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இன்று (18.10.2024) நடைபெற்றது.
இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்கழு மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் தொழில் வாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான திட்டமொன்று மாவட்ட செயலகத்தின் ஒழுங்கு படுத்தலின் கீழ் இடம்பெற்றது.
சூரிய மின்கல படலம் (solar Panel) நிறுவுதல் மற்றும் பாரமரித்தல் தொடர்பான இரு நாள் பயிற்சிகள் வழங்கப்பட்டன.
மேலும் இப் பயிற்சி நெறியில் திறமையை வெளிக்காட்டும் நபர்களுக்கு NVQ தர சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.
எமது நாட்டில் அதிகளவான சூரிய மின் தகடுகள் நிறுவப்பட்டு வருவதனால் அதனை பராமரித்தல் மற்றும் பிந்திய சேவைகளை வழங்குவதற்கான நபர்கள் தேவை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன், இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் அனுராதி பேரேரா , இழப்பீடுகளுக்கான அலுவலக உதவி பணிப்பாளர் அருன் பிரதீபன், பொது பண்பாட்டு ஆணைக்குழுவின் உதவி பணிப்பாளர் ஜயசூரியன், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி.நவநீதன், ஐ ஒ எம் (IOM)சமூகம் மற்றும் நல்லிணக்க பிரிவிற்கான தலைவர் கிரிஜா சிவகுமார் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇