சிறுபோக பருவத்தில் நெற்பயிர்ச்செய்கை மானியத் திட்டத்தின் கீழ் 2.5 பில்லியன் ரூபாய் விவசாயிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
213,771 விவசாயிகளுக்கு இம் மானியம் வழங்கப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 167,362 ஹெக்டேயர் நெற்பயிர்ச் செய்கைக்காக இம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் சுமார் 450,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பயிரிடப்படும் அனைத்து நெற்பயிர்களுக்குமாக சுமார் 7.5 பில்லியன் ரூபாய் நிதி மானியமாக வழங்கப்படுவதாக கமநல அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇