கடந்த நாட்களில் பெய்த கடும் மழை மற்றும் காற்றினால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரகாரம், பயிர்ச் சேதம் ஏற்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு ஹெக்டேயருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களது பயிர்களுக்குச் சேதம் ஏற்பட்டிருக்குமாயின், விவசாயிகள் 1918 என்ற துரித இலக்கத்துக்குத் தொடர்பினை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என, கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதி சபை மேலும் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










