சீரற்ற வானிலை காரணமாக , 2023 (2024) க.பொ. த சாதாரண தர பொதுத்தேர்வு விடைத்தாள்கள் மதிப்பீடு தொடங்கும் திகதியை மாற்றியமைக்க உள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டில் ஈடுபட உள்ள அதிகாரிகளுக்கு ஏற்படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, ஜூன் 6ம் திகதி தொடங்க இருந்த முதல் கட்ட மதிப்பீட்டு பணியை ஜூன் 8ம் திகதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீடு ஜூன் 8 ஆம் திகதி முதல் ஜூன் 17 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 101 மையங்களில் நடைபெறும் என்று பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇