புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 14 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரை கோருவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதி கையேடு இம்முறை ஆணைக்குழுவின் இணையத்தளமான www.ugc.ac.lk இலிருந்து மட்டுமே கிடைக்கும். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இம்முறை அதனை அச்சிட முடியவில்லை.

விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதற்கு மேலும் மூன்று வார கால அவகாசம் அளிக்கப்படும். அதாவது, ஜூலை 19 ஆம் திகதி வரை விண்ணப்பதாரர்கள் ஒருமுறை மட்டுமே திருத்தங்களைச் செய்ய முடியும்.

விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஓகஸ்ட் கடைசி வாரம் அல்லது செப்டெம்பர் முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை வெளியிடவும் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects