எதிர்வரும் பெரும்போகத்திற்கு தேவையான 21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை இன்று முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அரசாங்க உர நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, லங்கா உர நிறுவனமும் கொழும்பு வர்த்தக உர நிறுவனமும் விநியோகப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
50 கிலோகிராம் யூரியா உரம் மூடை ஒன்று 9 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உர கொள்வனவுக்காக ஒரு ஹெக்டயருக்கு 15ஆயிரம் ரூபாவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇