அவுஸ்திரேலிய கனியவள நிறுவனம் ஒன்று இலங்கையில் எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனம் எதிர்வரும் ஜூலை அல்லது ஒகஸ்ட் மாதமளவில் இலங்கையில் எரிபொருள் வர்த்தகத்தை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தின் இலங்கை கிளையின் பணிப்பாளர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிறுவனத்திற்கு இலங்கையில் உள்ள 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் மேலதிகமாக 50 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று முதலீட்டுச் சபையுடன் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதன் முதற்கட்டமாக 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளதுடன் இந்த ஆண்டு இறுதிக்குள் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படும் என குறித்த அவுஸ்திரேலிய நிறுனத்தின் இலங்கைக் கிளை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇