மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்த் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலகத்தில் 09.09.2025 அன்று நடைபெற்றது.
இதன் போது எதிர்வரும் பருவப் பெயர்ச்சிக்கான முன்னாயத்தம், வறட்சிகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைள், குடி நீர் வழங்கள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள பல வேலைத்திட்டங்கள் தொடர்பான விளக்கங்கள் தெளிவூட்டப்பட்டன.
இதன் போது கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர்,
கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தை குறைப்பதற்கும் தடுப்பதற்குமான வேலைத்திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்வரும் பருவ பெயர்ச்சி மழையின் போது வெள்ளத்தை குறைப்பதற்கும் தோனாக்களையும், வடிகால்களையும் துப்பரவு செய்து நீர் வழிந்து ஒடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










