பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்ததன் காரணமாக தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை வீழ்ச்சியடைந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வித்துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாக எதிர்க்கட்சியால் நாடாளுமன்றில் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் 330,000ஆக காணப்பட்ட இலங்கையின் வருடாந்த பிறப்பு வீதம், தற்போது 300,000ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் எதிர்காலத்தில் தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்க்கை குறையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கல்வி முறையின் மீது மாணவர்கள் நம்பிக்கை இழந்து வருவதால் பாடசாலைக் கல்வி முறையில் இருந்து விலகி, மேலதிக வகுப்புகளை நோக்கி அவர்கள் ஈர்க்கப்படுகின்றனர்.
எனவே மாணவர்களிடையே நாட்டின் கல்வி முறையில் நம்பிக்கை கொண்டு வரும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.