பாரம்பரிய உணவுகளின் போசனை மருத்துவம் மற்றும் அவற்றின் தொழிற்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (05) இடம் பெற்றது.
அன்றாட வாழ்கையில் நாம் உண்ணும் பாரம்பரிய உணவிலுள்ள பதார்த்தங்களின் செயற்பாடுகள், சிறுதானியங்கள், எதிர்போசனைக்கூறுகள் மற்றும் உணவினால் ஏற்படும் பக்க விளைவுகள் அதன் நிவாரணம் பற்றிய விளக்கங்களை அவுஸ்ரேலிய மருத்துவர் நித்தி கனகரத்தினத்தினால் வழங்கப்பட்டதுடன், உடல் ஆரோக்கியம், விஞ்ஞான ரீதியான விளக்கங்கள் என்பனவும் வழங்கப்பட்டது.
புதிய உணவு பழக்கவழக்கங்களினால் ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அவை எவ்வாறு பாதிப்பு மற்றும் உடலில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன தொடர்பான விளக்கங்களும் இதன் போது வழங்கிவைக்கப்பட்டது.
இதன் போது மாவட்ட செயலக உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் ஆர்வமாக கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇