நாட்டில் நிலவிய மழையுடனான காலநிலை காரணமாக பயிர்செய்கை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் நிலவிய கடுமையான வெள்ளம் காரணமாக தேயிலை செய்கை நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தேயிலை சபை மற்றும் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை என்பன தெரிவித்துள்ளன.
இந்த விடயம் குறித்த கலந்துரையாடல் ஒன்று விவசாய அமைச்சர் தலைமையில் பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
வெள்ளம் குறைவடைந்த பின்னர் அதனால் உருவான சேறு தேயிலை செடிகளில் படிந்துள்ளமையால் அவை இறக்கும் வாய்ப்பு காணப்படுவதாகவும் இலங்கை தேயிலை சபை மற்றும் சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை என்பன தெரிவித்துள்ளன.
தேயிலை செடிகளில் படிந்துள்ள சேற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு தேயிலை செய்கையாளர்களுக்கு அறிவிக்குமாறு குறித்த சபைகளிடம் விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெள்ளம் மற்றும் மழை காரணமாக இதுவரை சுமார் 1,500 ஏக்கர் நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇