நாட்டில் ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தின் பணிப்புறகணிப்பு தொடர்வதால் இன்றும் குறைந்தது 20 அலுவலக ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றும் (09.06.2024) 50க்கும் மேற்பட்ட திட்டமிடப்பட்ட ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் இயந்திர பொறியியலாளர்கள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்புறகணிப்பு இன்று (10.06.2024) நான்காவது நாளாகவும் தொடர்கிறது.
ரயில் இயந்திர சாரதிகளின் இரண்டாம் நிலை பதவி உயர்வு தாமதம், ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஏற்படும் தாமதம் மற்றும் பல பிரச்சனைகள் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து கடந்த வியாழக்கிழமை (06.06.2024) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇