மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருக்கும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் ஏற்பாட்டில் இக் கலந்துரையாடல் இடம் பெற்றதுடன், இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவினுல் உள்ள அரச காணியினை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக விசேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
அதேவேளை இப்பிரதேசத்தின் பொது தேவைகளை நிறைவேற்றுவதற்கும், இளைஞர்களின் விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென இராஜாங்க அமைச்சரினால் ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்தல் தொடர்பாகவும் இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் ஆலோசனைகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த விசேட கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) நவருபரஞ்சினி முகுந்தன், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் வில்வரத்னம் சிவப்பிரியா, வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரின் பிரத்தியோக செயலாளர் த.தஜீவரன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇