மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இன்று (10.06.2024) முதல் திராய்மடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட செயலக கட்டிடத்தில் இயங்கும் என்பதை சகல பொதுமக்களுக்கும் அறியத்தருவதுடன், சில கிளைகளின் சேவைகள் மாத்திரம் மறு அறிவித்தல் வரை பழைய மாவட்ட செயலகம் இயங்கிய கட்டடத்தில் தமது சேவையை தொடரும் என அறியத்தருகின்றனர்.
அந்தவகையில் பழைய மாவட்ட செயலக கட்டடத்தில் இயங்கும் பிரிவுகள் வருமாறு…
- விளையாட்டுப்பிரிவு
- நுகர்வோர் அதிகார சபை
- சிறு கைத்தொழில் பிரிவு
- சமூகப் பாதுகாப்புச் சபை
- பிரதிப் பதிவாளர் நாயகப் பிரிவு (கிழக்கு வலயம்)
- காணிப் பதிவாளர் பிரிவு
- நன்னீர் மீன் வளர்ப்புப் பிரிவு
- மனித வள அபிவிருத்தி அதிகார சபை
- மாநாட்டு மண்டபம்
- UNDP
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇