ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
வாக்காளர் வாக்குச்சீட்டில் தான் வாக்களிக்கவுள்ள வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரில் அதற்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 என்ற இலக்கத்தை குறித்து வாக்கைப் பிரயோகித்தல் வேண்டும்.
அதன் பின்னர், 2 மற்றும் 3 என்ற இலக்கங்களை குறிப்பதன் மூலம் இரண்டு வேட்பாளர்களுக்கு தனது விருப்புத் தெரிவை குறிப்பட முடியும்.
வாக்காளர் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகளை அடையாளமிடவில்லை எனினும் அதில் முறையானவாறு ஒரு வேட்பாளருக்கு அடையாளமிடப்பட்ட வாக்கொன்று காணப்பட்டால் அது செல்லுபடியான வாக்கொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.
வாக்காளரின் உளக்கருத்து வாக்குச்சீட்டில் ஏதேனும் தெளிவான அடையாளம் ஒன்று (உதாரணமாக; x என்ற அடையாளம்) காணப்பட்டால் அது வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்கொன்றாக கருதப்படும்.
இதேவேளை,
- எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்கு அடையாளமிடப்படாமல் இருத்தல்.
- ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்கு அடையாளமிடப்பட்டு இருத்தல்.
- ஒரு வேட்பாளருக்கு 1 என்ற இலக்கமும் மற்றைய வேட்பாளருக்கு x என்ற அடையாளமும் காணப்படல்.
- இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவுகள் மாத்திரம் அடையாளமிடப்பட்டு இருத்தல்.
- வாக்காளரை அடையாளம் காணக்கூடியவாறு ஏதேனும் எழுதப்பட்டிருத்தல்.
- 1 தவிர்த்த வேறு அடையாளமொன்றுடன் 2,3 விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல்.
- 1,2,3 ஐ விட அதிகமான வாக்கு மற்றும் விருப்புத் தெரிவுகள் அடையாளமிடப்பட்டு இருத்தல்.
போன்ற விடயங்கள் காணப்படும் வாக்குச்சீட்டுகள் நிராகரிக்கப்படும் என அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇