முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பெண்டுகள்சேனை கணபதி வித்தியாலய மாணவர்களுக்கு 6 துவிச்சக்கர வண்டிகள் திருத்தியமைக்கப்பட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் போக்குவரத்து வசதி கருதி பாடசாலையில் பாவிக்க முடியாத நிலையில் காணப்பட்ட 6 துவிச்சக்கர வண்டிகளையும் முனைப்பு நிறுவனம் எடுத்து சகல புதிய உதிரிப்பாகங்களையும் பொருத்தி 88500/= செலவில் திருத்தியமைத்து பாடசாலையின் அதிபர் முன்னிலையில் முனைப்பு ஸ்ரீ லங்கா தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார், பொருளாளர் அ.தயானந்தரவி ஆகியோரினால் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஒரு துவிச்சக்கர வண்டியினை இரண்டு மாணவர்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதுடன் குறித்த மாணவர்கள் பாடசாலையினை விட்டு வெளியேறும் போது பாடசாலையில் துவிச்சக்கர வண்டியினை ஒப்படைத்துச் செல்வார்கள் மீண்டும் வேறு மாணவர்கள் அதனை பயன்படுத்துவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇