திருகோணமலை ஸாஹிராக் கல்லூரி மாணவன் பஹ்மி ஹசன் சலாமா இம்மாதம் ஜூன் 15 ஆம் திகதி பாக்கு நீரிணையை நீந்திக் கடக்கவுள்ளார்.
தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய இவர் கடந்த மூன்று மாதங்களாக இச் சாதனை முயற்சிக்கான தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.
இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல் முனையிலிருந்து தலைமன்னார் வரையான 32 கிலோமீற்றர் தூரத்தை 8 மணி நேரத்தில் தான் கடக்க எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 18ஆம் திகதி இவர் பாக்கு நீரிணையின் இலங்கை கடல் எல்லையில் இருந்து தலைமன்னார் வரையிலான தூரத்தை பயிற்சி அடிப்படையில் நீந்தி கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇