மட்டக்களப்பு பொது நூலகக் கட்டடத் தொகுதியின் நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைக்கான விசேட கலந்துரையாடல் பிரதமரும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான தினேஷ் குணவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம் பெற்றது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்பர உட்பட கட்டடத் திணைக்களத்தின் பிரதான பொறியியலாளர், மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளர், கட்டட நிர்மாணக் கம்பனியின் உரிமையாளர், மாகாண சபைகள் மற்றும், உள்ளூராட்சி அமைச்சின் உதவிச் செயலாளர் உட்பட அவ்வமைச்சின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு பொது நூலகத்திற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 345 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக ஏற்படும் செலவை பெற்றுக்கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இதன் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇