சோழன் உலக சாதனை படைத்த செல்லையா திருச்செல்வம்!

Tamil
 – 
ta

யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் வசித்து வரும் செல்லையா திருச்செல்வம் எனும் 60 வயது உழவர் தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் வைத்து டாடா ஏசி ஊர்தியில் அதன் ஓட்டுநர், அறிவிப்பாளர் மற்றும் இருவர் என நான்கு பேரை வைத்து, 1,700 kg எடையினை கொண்ட( TATA) ஊர்தியை தனது தாடியில் கட்டி 510 மீட்டர் தூரம் கட்டியிழுத்து சோழன் உலக சாதனை படைத்தார்.

ஏற்கனவே இவர் இலங்கையில் வைத்து 4 உலக சாதனைகள் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த உலக சாதனை நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தது.

சோழன் உலக சாதனை படைத்த திருச்செல்வத்திற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவுக் கேடயம், பதக்கம், அடையாள அட்டை போன்றவை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலனினால் வழங்கப்பட்டது.

நிகழ்வின் இறுதியில் உலக சாதனை படைத்த செல்லையா திருச்செல்வம் அவர்களை அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects