பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு உதவி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது
கல்வி அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி ஆட்சேர்ப்புக்கான தகைமைகளை பூர்த்தி செய்த ஆண்களும் பெண்களும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விண்ணப்பப் படிவங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் www.donets.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
அதேநேரம் விண்ணப்பப் படிவங்களை இணைய முறைமை ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் திகதி இரவு 9 மணிவரையில் மாத்திரமே விண்ணப்பப் படிவங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதற்கான பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇