இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.3 சதவீதத்தினாலும் கைத்தொழில் துறை 11.8 சதவீதத்தாலும் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதாரம் 12 சதவீதமாக பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் 2.2 சதவீத்தினால் வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇