சந்திரனில் ஆய்வுகளை நடத்திய சீனாவின் Chang ’e 6 விண்ணோடம் இன்று (25.06.2024) பூமிக்குத் திரும்புகிறது.
இந்த விண்ணோடம் , சந்திரனில் சேகரித்த சுமார் 2 கிலோ கிராம் அளவான மாதிரிகளை பூமிக்குக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவின் வடக்கில் உள்ள மொங்கோலியாவில் இன்று இந்த விண்ணோடம் தரையிறங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதுவரையில் சந்திரனிலிருந்து திரட்டப்பட்ட அதிகப்படியான மாதிரிகளை இந்த விண்ணோடம் பூமிக்குக் கொண்டுவருதால், இது குறித்து சந்திர ஆய்வு விஞ்ஞானிகள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
இந்த மாதிரிகளைச் சோதனைக்கு உட்படுத்தும் போது, பல ஆண்டுக்காலமாக நிலவி வருகின்ற சந்திரன் குறித்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇