கோறளைப்பற்று பிரதேச செயலகத்தின் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ முதலாம் காலாண்டுக்குரிய குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம் பெற்றது.
இக் கூட்டத்தில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி ரமேஸ் காயத்திரி , கணக்காளர் ஏ.மோகனகுமார் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.ருவைத் , நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்.தாஹிர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கடந்த கூட்டங்களின் போது எடுத்த தீர்மானங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதுடன், உள்ளக கணக்காய்வு அறிக்கையின் மூலம் தெரியவந்த விடயங்களும் கலந்துரையாடப்பட்டதுடன், பொது கணக்கு குழுவின் பரிந்துரையின் முன்னேற்றம் ஆராயப்பட்டதுடன், நிதி ரீதியிலான முன்னேற்றம் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇