ஓகஸ்ட் மாத பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த முதன்மை பணவீக்கம் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது.

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.

கடந்த ஜூலை மாதத்தில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையிலான ஒட்டுமொத்த முதன்மை பணவீக்கம் 0.7% ஆக காணப்பட்ட நிலையில், அது ஓகஸ்ட் மாதத்தில் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஜூலையில் 2.2% ஆக இருந்த நிலையில், ஓகஸ்ட்டில் 2.9% ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், உணவு அல்லாத பிரிவுகளின் ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் ஜூலையில் -0.6% ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 0.4% ஆக அதிகரித்துள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects