தீவிர வலிப்பு நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவன் ஒருவனுக்கு , உலகில் முதன்முறையாக மூளையைக் கட்டுப்படுத்தும் மைக்ரோ சாதனம் வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சமர்செட்டைச் சேர்ந்த, 13 வயதாகும் குறித்த சிறுவனுக்கு கடந்த ஆண்டு லண்டனில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சோதனை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட இச் சத்திர சிகிச்சையின் பின்னர், பகல் நேரத்தில் அவருக்கு ஏற்படுகின்ற வலிப்பு நோய்த் தாக்கம் 80 சதவீதத்தினால் குறைவடைந்திருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
மண்டையோட்டில் பொருத்தப்படுகின்ற இம் மூளைக் கட்டுப்பாட்டுக் கருவி, மின்னலைகளை மூளைக்குச் செலுத்தி, வலிப்பு ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇