உலக சந்தையில் ஏற்படும் விலை மாற்றத்தைக் கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு திருத்தம் மேற்கொள்ளப்படும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய லாஃப்ஸ் நிறுவனத்தின் குழுமப் பிரதான நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையின் சமையல் எரிவாயு விலை விபரம் இன்னும் வெளியாகவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில் அந்த விபரம் வெளியாகும்.
அந்த விலையில் ஏற்ற இறக்கம் இருக்கக் கூடும்.
அதற்கமைய நுகர்வோருக்கு நன்மை பயக்கும் வகையில் விலை அறிவிப்பை வெளியிடவுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனத்தின் குழுமப் பிரதான நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










