லிப் பாம் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்…..
லிப் பாம் தேர்ந்தெடுப்பது எப்படி என்று பார்ப்பதற்கு முன், எக் காரணத்துக்காக லிப் பாம் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
அக் காரணத்துக்கேற்ற லிப் பாம் வாங்கிப் பயன்படுத்துவதுதான் சரியாகவும் இருக்கும்.
சிலருக்கு உதடுகள் எப்போதும் வறண்டு காணப்படும். அவர்களுக்கு Moisturizing தன்மை கொண்ட லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானதாக இருக்கும்.
இன்னும் சிலருக்கு உதடுகள் வெடித்துப் போகும் பிரச்சினை இருக்கும். அவர்கள் அதற்கான காரணத்தை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.
சரும மருத்துவரை அணுகி, உதடுகள் வெடித்துப்போவதற்கான காரணம் அறிந்து அதற்கேற்ற லிப் பாம் பயன்படுத்தலாம்.
இன்னும் சிலருக்கு உதடுகளின் இயல்பான நிறம் மாறி, கருமையாக இருக்கும். குறிப்பாக, புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு, ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இப்படி இருக்கலாம். இவர்கள் லிப் பாமில் moisturizer மட்டுமன்றி, சன் ஸ்கிரீனும் உள்ளதுபோல தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
சரும மருத்துவரை அணுகினால், உதடுகளின் கருமையைப் போக்கும்படியான லிப் லைட்டனிங் தன்மை கொண்ட லிப் பாமை பரிந்துரைப்பார்.
இப்படி எந்தத் தேவையும் இல்லை… வெறும் அழகுக்காக மட்டுமே லிப் பாம் உபயோகிக்கிறேன் என்பவர்கள், moisturizer உள்ள லிப் பாம் பயன்படுத்தினாலே போதுமானது.
ஆனால், அதில் வாசனையோ, ஒவ்வாமையை ஏற்படுத்தும் விஷயங்களோ இல்லாதபடி பார்த்துத் தேர்ந்தெடுக்கலாம்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇