ஜூலை முதலாம் திகதியில் இருந்து காலாவதியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளின் காலத்தை ஒரு வருடத்தால் நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஈ பாஸ்போட் (E Passport) இலத்திரனியல் கடவுச்சீட்டு பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிடிய தெரிவித்துள்ளார்.
ஏதாவது வெளிநாட்டு பயணச்சீட்டு ஒன்று செல்லுபடியாகும் 10 வருட கால எல்லையை தாண்டிய பின்னர் அதற்கு மேலும் ஒரு வருட காலம் வழங்குவது இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகிக்கும் வரை மாத்திரமாகும் எனவும் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இலத்திரனியல் கடவுச்சீட்டு விநியோகம் ஆரம்பிக்கப்படுவதுடன் சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்கள் விரைவாக இலத்திரனியல் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇