கடன் வழங்கும் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமையை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் ஜுலி சங் , தமது எக்ஸ் தளத்தில் இதனை வரவேற்றிருப்பதுடன், இந்த ஒப்பந்தமானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்குப் பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இலங்கை தொடர்ந்து மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என்றும் நீண்டகால வளர்ச்சி நோக்கில் வெளிப்படைத் தன்மை மற்றும் நிலையான மாற்றங்களை உள்ளீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇