30.06.2024 அன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 11 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 344 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 41 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 379 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 355 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளது.
இதே வேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇