தற்போது கிடைக்கும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள இலக்கை அடைவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி தெரிவித்தார்.
இதற்காகத் தொழில்நுட்ப பொதி ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பாரம்பரிய விவசாயத் தொழிலுக்கு அப்பால் அதிகரித்து வரும் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை விவசாய அமைச்சு வெற்றிகரமாக நிர்வகித்து வருகின்றது.
விவசாயத் துறைக்குப் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதன் பலன்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதாகவும் விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇