உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் “உம் உதிரத்தால் அறம் செய் ஓர் உயிர் பிரியா நிலை காக்க உம் உன்னத உதிரம் தர வாரீர்”; எனும் தொனிப் பொருளில் உலக இரத்ததான தினத்தினை முன்னிட்டு மாவட்ட மட்டத்திலான இரத்ததான முகாம் களுவாஞ்சிகுடியிலுள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் ஒழுங்கு செய்யப்பட்டது.
இவ் இரத்ததான முகாமானது உலகத்தன்மம் சமூக அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் மண்முனை தென் எருவில் பற்று திட்ட செயற்பாட்டுகுழு தலைவி திருமதி.ஏஞ்சலா கணேசலிங்கம் தலைமையிலும் திட்ட செயற்பாட்டு குழு உபதலைவர் திரு.வ.குணசேகரம் ஒருங்கிணைப்பிலும் அமைப்பின் ஸ்தாபகர் செ.ரா.பயஸ்ராஜேந்திரனின் வழிகாட்டுதலிலும் , அமைப்பின் அமைப்பாளர் யோ. இதயகீதனின் மேற்பார்வையில் காலை 9.00 மணி தொடக்கம் 2.30 மணி வரை நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய நிலையப் பொறுப்பதிகாரி (OIC) T.அபயவிக்கிரம , சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயல நிர்வாக உத்தியோகத்தர் வி.தவேந்திரன் , கௌரவ அதிதிகளாக பட்டிருப்பு வலய கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் பி.திவிதரன்மற்றும் போரதீவுப்பற்று பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர் ம.சத்தியநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் அமைப்பின் இயங்கு நிலையில் இருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மட்டத்திலான மண்முனை வடக்கு , மண்முனை பற்று , மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று பிரதேச பிரிவுகளில் இருந்து சுமார் 83 அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பிரதேச பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் , இளைஞர் யுவதிகள் , பொதுமக்கள் என 45 குருதி கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.
அத்துடன் நிகழ்வில் பார்வை ஒளியியல் பரிசோதனை நிலையத்தால் ( vision optical ) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் 30 ற்கும் மேற்பட்டோர் பயன டைந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇