கடந்த 20 ஆண்டுகளாக பாவனையிலிருந்த நாணயத்தாள்களின் வடிவமைப்பை விட புதிய வடிவமைப்பில் நாணயத்தாள் ஒன்றை ஜப்பான் அறிமுகப்படுத்தியுள்ளது.
போலி நாணயத்தாள்களை அடையாளம் காணும் அம்சங்களும், வரலாற்றுச் சாதனையாளர்களின் படங்களும் புதிய நாணயத்தாளில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அதன் பின்புறத்தில் டோக்கியோ விமான நிலையம், wisteria மலர்கள், ஃபுஜி மலையின் பிரபல ஓவியம் ஆகியனவும் இடம்பெற்றுள்ளன.
மேலும் வயதானோர் எளிதில் படிக்கும் வகையில் அனைத்தும் பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நாணயத்தாள் முதலில் வங்கிகளுக்கும் நிதி நிலையங்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇