இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்தி, நாட்டை முன்னணி கப்பல் சுற்றுலா மையமாக ஆக நிலைநிறுத்தும் நோக்கில், அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான ஜேர்மன் கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதிநிதித்துவ நிறுவனமான AHK, அத்துடன் ஜேர்மனியின் MEC2 GmbH நிறுவனத்தின் பிரதிநிதிகள் இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இலங்கை துறைமுகங்களுக்கு வருகை தரும் சுற்றுலா கப்பல்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக அரச நிறுவனங்களுக்கும் தனியார் துறைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறுகிய கால சுற்றுப்பயணங்களுக்காக இலங்கைக்கு வரும் கப்பல் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தை நீடிப்பதற்குத் தேவையான மூலோபாயத் திட்டங்களை வகுப்பது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த புதிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம், நாடு முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் நேரடிப் பயன்களைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இதன் மூலம் உள்ளூர் மக்களுக்கும் குறிப்பிடத்தக்க பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் தற்போது காணப்படும் முக்கியமான முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பிலும் அமைச்சர் விஜித ஹேரத், ஜேர்மன் பிரதிநிதிகளுக்கு விளக்கமளித்துள்ளார்
.
இலங்கையின் சுற்றுலாத்துறையில் கப்பல் சுற்றுலாவை முக்கியமான வளர்ச்சி சக்தியாக மாற்றி, இந்தத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அமைச்சர் விஜித ஹேரத் இதன்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.





இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()







