உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளுக்காக கெலிப்சோ புகையிரதம் 14.02.2025 அன்று முதல் 4 தடவைகள் இயக்கப்படுவதாக புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பதுளை பண்டாரவளை, பண்டாரவளை தெமோதரை, தெமோதரை பண்டாரவளை மற்றும் பண்டாரவளை பதுளை ஆகிய இடங்களுக்கு இந்த புகையிரத சேவை இடம்பெறவுள்ளது.
குறித்த புகையிரதத்தை எல்ல 9 வளைவு பாலம் மற்றும் தெமோதரை புகையிரத நிலையத்திலும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகையிரதத்தில் மேலும் இரு பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 79 இருக்கைகளைக் கொண்ட மூன்று பெட்டிகள் காணப்பட்டுள்ளதுடன், தற்போது புகையிரதத்தில் மேலதிகமாக இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்டமையினால் இருக்கைகளின் எண்ணிக்கை 143 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரதத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.



![]()










