இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று (09.07.2024) பெற்றுக்கொள்ளப்படவுள்ளன.
மின்சார சட்டத்தின் படி, இந்த வருடம் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் , இதற்கு முன்னதாக இக் கருத்துக் கோரல்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, வாய்மூல கருத்துக் கோரல்கள் இன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
இன்றையதினம் உத்தேச மின் கட்டண திருத்தம் குறித்த கருத்துகளுக்கு தெரிவிப்பதற்காக , பல்வேறு மின்சார நுகர்வோர் குழுக்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 50 பேர் பதிவு செய்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மின் கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் ஜூலை 15ஆம் திகதி பொதுமக்களின் வாய்மூல கருத்துக் கோரல்களுக்கு பின்பு அறிவிக்கப்பட உள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇