தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்தில் இதற்கான திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ரூபசிங்க தெரிவித்துள்ளார்.
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் ஊடாகத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் போக்குவரத்து ஒழுங்குபடுத்தல் அதிகாரத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇