மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களது நடைபவனி ஞாயிற்றுக்கிழமை (29) நடைபெற்றது.
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின் அதிபர் திருமதி.ரி.சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நடைபவனியில் பாடசாலையில் மூத்த கல்வியியலாளர்கள், பாடசாலையில் கடமையாற்றிய முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வில் பாடசாலையில் கடமையாற்றி மரணமடைந்த அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்காக மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
குறித்த நடைபவனியில் வாழைச்சேனை இந்துக்கல்லூரி தேசிய பாடசாலையின் பான்ட் மாணவர்களின் வரவேற்புடன், பாடசாலையின் கராத்தே மாணவர்கள், சுற்றாடல் பகுதி, மாணவ தலைவர்கள், சகிதம் பவனியாக கலந்து கொண்டனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇