அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக காணப்படும் என்பதால் கடற்படை மற்றும் மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் மேல் பருவப் பெயர்ச்சி வலுவடைந்து காணப்படுவதால் குறித்த பகுதிகளில் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன் மேலும் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, கீழே உள்ள வரைபடத்தில் ‘சிவப்பு’ நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கடல் பகுதிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை கடற்படையினர் மற்றும் மீனவ சமூகத்தினர் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇