15.07.2024 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
- இலங்கை சுதேச மருத்துவ தேசியக் கொள்கை 2024-2034
2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுள்வேத (திருத்தச்) சட்டத்தின் திருத்தப்பட்ட 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் நாட்டில் சுதேச மருத்துவ முறையை நடைமுறைப்படுத்தும் சட்ட ரீதியான சட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், சுதேச மருத்துவ சேவைகளுக்காக அரச கொள்கை வழிகாட்டலுக்கான தனியான தேசியக் கொள்கையொன்று இதுவரை தயாரிக்கப்படவில்லை. சமகால சேவை வழங்கலில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், சுதேச மருத்துவ முறையைப் பாதுகாப்பதன் மூலம் எதிர்கால சந்ததியினருக்குத் தரப்பண்பானதும் திடமானதுமான மருத்துவ முறையை உவந்தளிக்கும் நோக்கில், உள்வாங்கலுடன் கூடிய தேசிய சுகாதாரக் கொள்கையில் சுதேச மருத்துவ தேசிய கொள்கையொன்றின் தேவை காணப்படுகின்றது. அதற்கமைய, புத்திஜீவிகளின் பரந்தளவான பங்கேற்பின் மூலம் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் சுதேச மருத்துவ தேசியக் கொள்கை 2024-2034 இனை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- பட்டம் வழங்குகின்ற நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்ப்பதற்கான வசதிகளை வழ ங்கல்
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் 17 பல்கலைக்கழகங்களில் 5% சதவீதமான வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்போது ஆண்டுதோறும் இடஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. மேலும், பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25(அ) பிரிவின் மூலம் அங்கீகரிக்கப்பட்டுள்ள பட்டம் வழங்குகின்ற 26 நிறுவனங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை உள்ளீர்த்துக் கொள்வதற்குள்ள இடஒதுக்கீட்டை அதிகரிப்பதன் மூலம், இலங்கையை ஆசியாவின் அறிவு மையமாக மாற்றுகின்ற நோக்கத்தை அடைய முடியுமென அடையாளங் காணப்பட்டுள்ளது. ஆனாலும், ஒவ்வொரு நாடுகளில் பல்கலைக்கழக அனுமதிக்கான குறைந்தபட்ச தகைமைகள், இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனத்திற்கு பட்டம் பெறுவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்கான தகைமைகளை ஏற்புடையதாக்கிக் கொள்வதற்கான இயலுமையை நிச்சயித்துக் கொள்வதற்கு திட்டவட்டமான முறையொன்று இல்லாமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஐக்கிய நாடுகள் சபையின் 193 உறுப்பு நாடுகளில் பல்கலைக்கழக அனுமதிக்காக பயன்படுத்தப்படும் குறைந்தபட்ச தகைமைகள் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25(அ) பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் வழங்கும் நிறுவனங்கள் மூலம் நடாத்தப்படுகின்ற பட்டப்படிப்புக்காக உள்ளீர்த்துக் கொள்வதற்கான குறைந்தபட்ச தகைமையாகக் கருத்தில் கொள்வதற்கும், குறித்த தகைமைகள் மூலம் உள்ளடக்கப்படாத விதிவிலக்கான சந்தர்ப்பங்களுக்கு ருமு UK NARIC நிறுவனத்தின் மூலம் சான்றுப்படுத்திக் கொள்வதற்கும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- இலங்கை முதலீட்டு சபையால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வீடமைப்புக் கருத்திட்டத்திற்காக களனி, வெதமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள காணியை எச்.எம்.கே. புரொப்பர்டி டிவலொப்பேர்ஸ் (தனியார்) கம்பனிக்கு வழங்கல்
இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களனி, வெதமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள 12 ஏக்கர் காணியை எச்.எம்.கே. புரொப்பர்டி டிவலொப்பேர்ஸ் (தனியார்) கம்பனிக்கு வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு தொடர்பான அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இதற்கு முன்னர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், அக்கம்பனி செயற்பாடுகளை மேற்கொள்வதில் குறித்த உடன்பாடுகளுக்கு இணங்கியொழுகாமையால், அக்காணியை வழங்குவதற்கு இதுவரை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. குறித்த காணியில் 03 கட்டங்களின் கீழ் வீடமைப்புக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அக்காணியைப் பெற்றுக் கொள்வதற்காக எச்.எம்.கே. புரொப்பர்டி டிவலொப்பேர்ஸ் (தனியார்) கம்பனி முதலீட்டுச் சபைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளது. அதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அடையாளங் காணப்பட்டுள்ள 08 ஏக்கர் 02 றூட் 16.26 பேர்ச்சர்ஸ் காணித்துண்டை பிரதம அரச விலைமதிப்பீட்டாளர் சமர்ப்பித்துள்ள சமகால மதிப்பீட்டின் பிரகாரம் குறித்த கம்பனிக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- களனி, முதுன்எல பிரதேசத்தில் அமைந்துள்ள காணித்துண்டை Storight Logistics (Pvt) Ltd இற்கு குத்தகைக்கு வழங்கல்
இலங்கை முதலீட்டு சபையின் அனுமதியுடன் விநியோக சேவைகள் மற்றும் களஞ்சிய வசதிகளுக்காக கொழும்புத் துறைமுகத்தை அண்டிய பகுதியில் அமைந்துள்ள காணித்துண்டொன்றை வழங்குமாறு Bitsuthra IT (Pvt) Ltd இனால் விண்ணப்பமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த கம்பனி சமர்ப்பித்துள்ள கருத்திட்ட முன்மொழிவு ஏற்புடைய முதன்மையான தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளமையால், முதலீட்டுச் சபையின் ஏற்பாடுகளுக்கமைய, Storight Logistics (Pvt) Ltd எனும் பெயரிலான புதிய கம்பனியொன்று தாபிக்கப்பட்டுள்ளது. களனி, முதுன்எல பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான 02 ஏக்கர் 1.08 பேர்ச்சர்ஸ் காணித்துண்டைக் குறித்த கருத்திட்டத்திற்குப் பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, அக்காணித்துண்டை அரச பிரதம விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டுக்கமைய Storight Logistics (Pvt) Ltd இற்கு 30 ஆண்டுகாலக் குத்தகைக்கு வழங்குவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
- தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் கட்டண மீளாய்வு செய்வதற்காக நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் நீர்க்கட்டணச் சூத்திரமொன்றை நடைமுறைப்படுத்தல்
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் புதிய கட்டணக் கொள்கை மற்றும் சூத்திரத்திற்கான அங்கீகாரம் 2024.04.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளதுடன், அதில் ஏற்புடைய அனைத்துத் தரப்பினர்களுடன் கலந்துரையாடித் தேவையான அனைத்துத் திருத்தங்களையும் உட்சேர்த்து, புதிய நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் நீர்க் கட்டணச் சூத்திரத்தை சமர்ப்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள திருத்தப்பட்ட நீர்க் கட்டணக் கொள்கை மற்றும் திருத்தப்பட்ட நீர்க்கட்டண சூத்திரத்தை 2025 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்காக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கட்டுநாயக்க, பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் வருகைப் பிரதேசத்தில் சுங்க நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நாணயப் பரிமாற்று கருமபீடத்தை செயற்படுத்தல்
2024.01.08 அன்று இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய, கட்டுநாயக்க, பண்டாரநாயக்கா சர்வதேச விமானநிலையத்தின் வருகைப் பிரதேசத்தில் சுங்க நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் நாணயப் பரிமாற்று கருமபீடத்தை செயற்படுத்துவதற்காக வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) கம்பனியால் மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறி கோரப்பட்டுள்ளது. அதற்காக, 05 போட்டி விலைமுறிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அவ்விலைமுறிகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரையின் பிரகாரம், மூன்று (03) வருடங்களுக்கு கீழ்வரும் வகையிலான ஒப்பந்தங்களை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கருமபீட இலக்கம் 01 சம்பத் வங்கி பீஎல்சீ இற்கும்,
- கருமபீட இலக்கம் 02 மக்கள் வங்கிக்கும்,
- கருமபீட இலக்கம் 03 கொமர்ஷல் பாங்க் ஒஃப் சிலோன் பீஎல்சீ இற்கும்,
- கருமபீட இலக்கம் 04 தோமஸ் குக் லங்கா (பிறைவெட்) லிமிட்டட் இற்கும்,
- கருமபீட இலக்கம் 05 இலங்கை வங்கிக்கும்.
- வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையில் தானியங்கி மூலம் உயர்தர ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான விலைமுறி வைக்கும் சேவைகள் மற்றும் அதுதொடர்பான துணைச் சேவைகளை வழங்குவதற்கான ஒப்பந்தம்
தானியங்கி மூலம் உயர்தர ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான விலைமுறி வைக்கும் சேவைகள் மற்றும் அதுதொடர்பான துணைச் சேவைகளை வழங்குவதற்கு வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையால் தற்போது Pடரளபசயனந முறைமை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வர்த்தக வகுப்பு ஆசனங்கள் ஒதுக்கப்படாமல் இருக்கின்ற சந்தர்ப்பங்களில் சிக்கன வகுப்பு ஆசனத்திற்கான விமானச்சீட்டுக்களைக் கொண்டுள்ள பயணி ஒருவருக்கு வர்த்தக வகுப்பு ஆசனமொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு விலைமுறி சமர்ப்பிக்கும் வாய்ப்புக்களை வழங்குவதன் மூலம் விமான சேவைகளின் வருமானத்தை அதிகரித்துக் கொள்ளலாம். இச்சேவைகளை மேற்கொண்டு செல்வதற்காக சர்வதேசப் போட்டி முறையின் கீழ் விலைமுறி கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 02 விலைமுறிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. குறித்த விலைமுறிகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், தொழிநுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைக்கமைய, வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு வரையறுக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவையில் தானியங்கி மூலம் உயர்தர ஆசன ஒதுக்கீடு செய்வதற்கான விலைமுறி வைக்கும் சேவைகள் மற்றும் அதுதொடர்பான துணைச் சேவைகளை 05 வருடங்களுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை Pடரளபசயனந ஐnஉ இற்கு ஒப்படைப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- கொடகம – ஹோமாகம வீதியின் அரைவாசி பூர்த்தி செய்யப்பட்டுள்ள ஐ ஆம் பகுதி வேலைகளைப் முழுமையாக அபிவிருத்தி செய்து பூர்;த்தி செய்வதற்காக சவுதி நிதியத்தின் நிதியை ஒதுக்கீடு செய்தல்
திருகோணமலை மாவட்டத்தில் குறிஞ்சாக்கேணி பாலக்கட்டுமானம் செய்தல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சவுதி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. குறித்த கருத்திட்டத்தின் பெறுகைச் செயன்முறை பூர்த்தி செய்யப்பட்ட பின்னர், மேலும் 10.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் மீதியாக எஞ்சியுள்ளதுடன், குறித்த கடன் மீதியை கொடகம – ஹோமாகம வீதியின் அரைவாசி பூர்த்தி செய்யப்பட்டுள்ள ஐ ஆம் பகுதியின் வேலைகளைப் பூர்த்தியாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறித்த வீதியின் எஞ்சிய வேலைகளுக்காக 12 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேiவாயாவதுடன், அதற்குத் தேவையான எஞ்சிய 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை சவுதி நிதியத்தால் நிதியளிக்கப்படுகின்ற வீதி வலையமைப்புக்கள் அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கடன் தொகையிலிருந்து வழங்குவதற்கு அபிவிருத்திக்கான சவுதி நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நிதியைப் பெற்றுக்கொண்டு கொடகம – ஹோமாகம வீதியின் அரைவாசி பூர்த்தி செய்யப்பட்டுள்ள ஐ ஆம் பகுதியின் வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தைப் பூர்த்தி செய்தல்
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தி நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.04.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரிப்பால் நானுஓயா புகையிரத நிலையத்தை நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கான ஒப்பந்தப் பெறுமதி 74.63 மில்லியன் ரூபாய்கள் 101.81 மில்லியன்கள் வரைக்கும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, புதிய திருத்தப்பட்ட மதிப்பீட்டின் கீழ் இலங்கை புகையிரத திணைக்களம் மற்றும் பொறியியல் பணிகள் தொடர்பான மத்திய ஆலோசனைப் பணியகம் (ஊநுஊடீ) மூலம் குறித்த நவீனமயப்படுத்தல் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கும், அதற்குத் தேவையான மேலதிக தொகையை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் மூலம் பெற்றுக் கொள்வதற்கும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படும் SMART Youth Exhibitions & Nights – 2024 நிகழ்ச்சித்திட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவாக்கம் செய்தல்
2019 ஆம் ஆண்டு தொடக்கம் இரண்டு வருடங்களாக உலகளாவிய ரீதியில் பரவிய கொவிட் நிலைமையின் முக்கிய பாதிப்புக்களாக பயணத்தடைகள், பரஸ்பர தொடர்புகள் இன்மை, தனிநபர் சந்திப்புக்களின்மை, மற்றும் குழுக்களாக ஒன்றுகூடுதல் போன்றன மட்டுப்படுத்தப்பட்டமையால், இளைஞர் சமுதாயம் மிகவும் அழுத்தங்களுக்கு உள்ளாக நேரிட்டது. அவர்கள் அவ்வாறான அழுத்தங்களுக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையில் அவர்களுடைய பொழுதுபோக்கு, இரசனை மற்றும் உளநல ஆரோக்கியத்தை விருத்தி செய்வதற்கும், அவர்கள் ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கும் வாய்ப்புக்களை வழங்கும் நோக்கத்துடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடாளாவிய ரீதியில் நடாத்துவது உகந்ததெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, நாடளாவிய ரீதியில் SMART Youth Exhibitions & Nights – 2024 நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தயாரிப்புக்களுக்குத் தேவையான சுக்கு இஞ்சி விநியோகம்
இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் தயாரிக்கப்படும் 87 மருந்து வகைகளுக்கு சுக்கு இஞ்சி மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுவதுடன், தற்போது சந்தையில் சுக்கு இஞ்சிக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகின்றது. இலங்கை சுங்கத்தால் அரசவுடமையாக்கப்பட்டுள்ள 50 தொன்கள் சுக்கு இஞ்சி காணப்படுவதுடன், குறித்த சுக்கு இஞ்சித் தொகையை சலுகை விலையில் இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்திற்குப் பெற்றுக் கொள்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- விலங்குகள் நலனோம்பல் சட்டமூலத்திற்கு பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுவால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களுக்கான அனுமதியைப் பெற்றுக் கொள்ளல்
விலங்குகள் நலனோம்பல் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக 2022.01.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், அதற்கிணங்க, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அச்சட்டமூலத்திற்கு பாராளுமன்றத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் விவசாயத் துறைசார் மேற்பார்வைக் குழு விதந்துரைகளைச் சமர்ப்பித்துள்ளதுடன், மேலும் சில திருத்தங்களையும் முன்மொழிந்துள்ளது. அத்திருத்தங்கள் குறித்த சட்டமூலத்திற்கான பாராளுமன்றக் குழுநிலை விவாதத்தில் சமர்ப்பிப்பதற்கு ஏற்புடைய வகையில் சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கமைய, திருத்தப்பட்ட விலங்கினங்கள் நலனோம்பல் சட்டமூலத்திற்கான பாராளுமன்றக் குழுநிலை விவாதத்திற்குச் சமர்ப்பிப்பதற்காக விவசாய மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 1979 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க ஆரம்பநிலை நீதிமன்ற வழக்குக் கோவைச் சட்டத்திற்கான திருத்தங்கள்
ஆரம்பநிலை நீதிமன்ற வழக்குக் கோவை சட்டத்தின் 66 ஆம் பிரிவின் கீழ் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கின்ற விண்ணப்பதாரர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக குறித்த சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2024.03.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் அரசியலமைப்புடன் இணங்கியொழுகின்றமைக்கான ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. இச்சட்டமூலத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பைத் திருத்தம் செய்தல்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லுக்கு மாற்றாக ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட’ எனும் சொல்லை பதிலீடு செய்து அரசியலமைப்பின் 83 ஆம் உறுப்புரையின் (ஆ) பந்தியைத் திருத்தம் செய்வதற்காக 2024.07.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம்
விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் முதலாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2024.03.04 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் மேலும் 03 பிரதேச செயலகப் பிரிவுகளைத் தெரிவு செய்து விவசாய நவீனமயமாக்கல் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் 10 மில்லியன் ரூபாய்கள் வீதம் 75 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் நிதியொதுக்கீட்டிலிருந்து 750 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. - இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலம்
இலங்கையில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுச் சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்காக 2023.12.18 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர், பல்வேறு தரப்பினர் இச்சட்டமூலத்திற்கு மேலும் திருத்தங்களை முன்மொழிந்தமையால், குறித்த சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான இடைச் செயலகத்தின் ஆலோசனைக் கலந்துரையாடல்கள் சுற்றுக்கள் நடாத்தப்பட்டு, இச்சட்டமூலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அத்திருத்தங்களை உள்ளடக்கி அடிப்படைச் சட்டமூலத்திற்கமைய, சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும், இதற்கு முன்னர் இச்சட்டமூலத்திற்காக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்வதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்களும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- நாணயமாற்று உண்டியல் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தங்களை அறிமுகப்படுத்தல்
1927 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க நாணயமாற்று உண்டியல் கட்டளைச் சட்டத்தில் காலங்கடந்த ஏற்பாடுகளைத் திருத்தம் செய்தல் அல்லது நீக்குவதற்காக 2024.01.24 ஆம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்;ப்பிப்பதற்காகவும், கௌரவ ஜனாதிபதி அவர்களும், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்களும் இணைந்து இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 1938 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க வங்கிக் கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்
1938 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க வங்கி கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்டுள்ள இலங்கை வங்கி இலங்கையின் நிதிச் சந்தையில் செயற்படும் முன்னணி நிறுவனமாவதுடன், அரசுக்குச் சொந்தமான வணிக வங்கி என்ற ரீதியில் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு விசேடமான பங்களிப்பை வழங்குகின்றது. போட்டியானதும், துரிதமாக மாற்றமடைந்து வரும் நிதிச் சந்தையில் இயங்கி, உயர்ந்த மட்ட நன்மைகளை பெறுவதை வரையறுக்கும் இடையூறுகள் மற்றும் பல சவால்கள் தற்போது அமுலிலுள்ள கட்டளைச் சட்டத்தில் நிலவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமைய 1938 ஆம் ஆண்டின் 53 ஆம் இலக்க வங்கி கட்டளைச் சட்டத்தை சமகால தேவைகளுக்கு பொருத்தமான வகையில் திருத்தம் செய்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ள அடிப்படைச் சட்டவரைபை அடிப்படையாக கொண்டு சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2024 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கட்டணங்கள்) ஒழுங்குவிதிகள் – (விடய இலக்கம் 43)
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய 2024-06-06 திகதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் 2024 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கட்டணங்கள்) ஒழுங்குவிதிகள் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத்தின் 71 ஆவது பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய அவ்வாறு விதிக்கப்படும் அனைத்து ஒழுங்குவிதிகளும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட திகதியிலிருந்து 03 மாத காலத்திற்குள் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிக்கப்படல் வேண்டும். அதற்கிணங்க, 2387 ஃ 38 இலக்க 2024-06-06 திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர (கட்டணங்கள்) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்துக்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்துக்கான திருத்தம் (அபராதத் தொகையை அதிகரித்தல்)
குற்றவியல் வழக்குக் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ள அபராதத் தொகையை சமகால பெறுமதியின் அடிப்படையில் அதிகரிப்பதற்கு இயலுமை கிட்டும் வகையில் குற்றவியல் வழக்குக் கோவை சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக 2023-11-27 திகதியன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை திருத்தம் செய்தல்.
பணத் தூய்தாக்கல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் உள்ளிட்ட ஏனைய சட்டரீதியற்ற செயற்பாடுகளை தடுப்பதற்காக நடைமுறையிலுள்ள உள்நாட்டு சட்டத்தை வலுவூட்டுவதற்காக கம்பனிகள் சட்டத்தை திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டத்தை திருத்தம் செய்வதற்கு 2024-07-09 திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கொள்கை ரீதியான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்காக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள திருத்தச் சட்டமூலத்திற்கு சட்ட மா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் கைத்தொழில் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
- சுரக்ஷா மாணவர் காப்புறுதி – 2024
சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டத்தை மீள அமுல்படுத்துவதற்கும், அதற்காக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திடமிருந்து விலைமனுக் கோருவதற்கும் 2024-05-06 திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கை காப்புறுதி கூட்டுத்தானத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விலை முன்மொழிவு அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டு, 2024 ஃ 2025, 2025 ஃ 2026 மற்றும் 2026 / 2027 ஆகிய ஆண்டுகளுக்காக சுரக்ஷா மாணவர் காப்புறுதி நிகழ்ச்சித்திட்டம் ரூபா 6.027 பில்லியன் (பெறுமதி சேர் வரி நீங்கலாக) தொகையில் அமுல்படுத்துவதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, மேலே குறிப்பிடப்பட்ட வகையில் 03 ஆண்டு காலத்துக்கு சுரக்ஷா மாணவர் காப்புறுதிக்கான ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிட்டட் நிறுவனத்துக்கு வழங்குவதற்கும், சுரக்ஷா மாணவர் காப்புறுதியின் கீழ் வருடாந்தம் 180,000 ரூபாவுக்கு குறைவான வருமானம் குடும்ப மாணவர்களின் பெற்றோரின் இறப்பு நன்மைகள் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கும் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதபதி மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇