நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் இன்றையதினம் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கடற்பிராந்தியங்களிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கடற்பிராந்தியங்களிலும் மணித்தியாலத்துக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்தை அண்மித்துள்ள கடற்பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியம் நிலவுகிறது.
எனவே, இந்த விடயம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇