கபுலுமுல்ல ரஜமஹா பத்தினி ஆலயத்தில் வருடாந்த எசல பெரஹெர நடைபெறுவதால் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெரஹேர இன்று (26) இரவு 8 மணி முதல் வீதி உலா வர உள்ளது.
அதன்படி, ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஏற்படக்கூடும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக குறித்த வீதியை பயன்படுத்தும்ற சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மாற்று வீதிகள்
- ஹட்டனில் இருந்து அவிசாவளை நோக்கி பயணிக்கும் வாகனங்கள் யடியாந்தோட்டை நவட சந்திக்கு வலது பக்கத்தில் பருஸ்ஸெல்ல, பனாபிடிய வீதியின் வராவல சந்தி வரை பயணித்து வராவல சந்தியில் இடது பக்கமாக உள்ள கேகாலை அவிசாவளை பிரதான வீதியில், கரவனெல்லை வரை பயணித்து பிரதான வீதியின் ஊடாக அவிசாவளை நோக்கி பயணிக்க முடியும்.
- கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும் வாகனங்கள், கரவனெல்லை சந்தியில் இடது பக்கமாக உள்ள கேகாலை அவிசாவளை பிரதான வீதியின் ஊடாக வராவல சந்திக்கு பயணித்து வலது பக்கமாக புளத்கொஹுபிடிய வீதியின் பனாபிடிய சந்தியில் வலது பக்கமாக திரும்பி ஹப்புகம்மன பருஸ்ஸெல்ல வீதியின் நவட சந்தி வரை பயணித்து பிரதான வீதிக்கு பிரவேசித்து ஹட்டன் வரை பயணிக்க முடியும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇