அமெரிக்காவில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரிப்பு Open Doors அறிக்கை தகவல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

அமெரிக்காவில் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதமாக அதிகரித்துள்ளதாகவும் இதனால் கல்வி தொடர்புகள் வலுவடைவதாகவும் ஓபன் டோர்ஸ் (Open Doors) அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான Open Doors Report on International Educational Exchange அறிக்கையின் வெளியீட்டை அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளது.

2023-2024 கல்வி ஆண்டில் அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளது. இது உலகத் தரமான கல்வியைத் தேடும் இலங்கை மாணவர்களின் வளர்ந்துவரும் ஒரு நற்செய்தியாகும் மற்றும் இரண்டு நாடுகளுக்கிடையேயான வலுவான கல்வி உறவுகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமெரிக்கத்தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஓபன் டோர்ஸ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில், சர்வதேச மாணவர்களின் இயக்கங்களை மிக விரிவாகப் பதிவுசெய்து வருகின்றது. இவ்வாண்டு அறிக்கை, உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 1.12 மில்லியன் சர்வதேச மாணவர்களை அமெரிக்கா வரவேற்றதை வெளிப்படுத்துகிறது. இது அமெரிக்காவை உயர் கல்விக்கான முன்னணி இடமாக உறுதிப்படுத்துகிறது. மேலும், Education USA பெயரில் உலகளாவிய கல்வி ஆலோசனை நெட்வொர்க்கின் 25ஆவது ஆண்டும் இம்முறை கொண்டாடப்படுகிறது.

அமெரிக்காவில் இலங்கை மாணவர்கள் அதிகரித்திருப்பது, முன்னோடியான கல்வி, ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் பரந்த மாணவர் அனுபவங்களை வழங்கும் அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்களின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க தூதர் ஜூலி சங்,

“அமெரிக்காவில் கல்வி பயிலும் இலங்கை மாணவர்களின் 10 வீத அதிகரிப்பு, மக்கள் இடையே வலுவான தொடர்புகளை உருவாக்கும் சர்வதேச கல்வியின் சக்தியை வெளிப்படுத்துகிறது. அமெரிக்க பல்கலைக்கழகங்கள் இலங்கை மாணவர்களுக்கு உலகத் தரமான கல்வி, முன்தோற்றமான ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை முழுவதற்குமான வலுவான தொடர்புகளை வழங்குகின்றன. இவ்வளர்ச்சி, அமெரிக்கா – இலங்கைக்கிடையிலான கல்வி ஒத்துழைப்பின் வலிமையையும் கல்வி மற்றும் புதுமையைக் கொண்டாடும் எங்கள் பொது அர்ப்பணிப்பையும் எடுத்துக் காட்டுகிறது. Education USA போன்ற திட்டங்கள் மூலமாக, இந்த கலாச்சார பரிமாற்றத்தில் ஆர்வமுள்ள மாணவர்களை ஆதரிக்க அயராது முயற்சி செய்கிறோம்.” என்றார்.

அமெரிக்க கல்வி நிறுவனங்களின் மேம்பட்ட STEM (விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பாடத்திட்டங்கள், ஆராய்ச்சி வசதிகள் மற்றும் நடைமுறை பயிற்சி வாய்ப்புகள் இலங்கை மாணவர்களை ஈர்க்கின்றன. இவ்வாறு பலர் முதுநிலை படிப்புகளைத் தேர்ந்தெடுத்து, இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான பங்களிப்புகளை உருவாக்கும் ஒரு உலகளாவிய வலையமைப்பின் பகுதியாகிவிடுகின்றனர்.

ஓபன் டோர்ஸ் (Open Doors) அறிக்கையின் வெளியீடானது, International Education Week (IEW) உடன் இணைந்து அமைந்துள்ளது. இது சர்வதேச கல்வியின் நன்மைகளை முன்னிலைப்படுத்துவதற்கும் மாணவர்களை உலகளாவிய கல்வி மற்றும் கலாச்சார பரிமாற்றங்களில் ஈடுபட ஊக்குவிப்பதற்கும் மையமாக விளங்குகின்றது.

அமெரிக்காவில் கல்வியைத் தொடர ஆர்வமுள்ள இலங்கை மாணவர்கள், Education USA மூலமாக இலவச ஆதரவுகள் மற்றும் ஒருங்கிணைந்த ஆலோசனைகளைப் பெற முடியும். மேலதிக தகவலுக்கு, Education USA அல்லது கொழும்பு அமெரிக்க தூதரகத்தின் ஆலோசனை மையத்தை தொடர்பு கொள்ள முடியும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects