உடலில் விஷம் கலப்பதனால் வருடத்திற்கு சுமார் 1000 பேர்வரை உயிரிழப்பதாக தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உடலில் விஷம் கலந்ததன் காரணமாக வைத்தியசாலைகளுக்கு அனுமதிக்கப்படுபவர்களைக் காப்பாற்ற வைத்தியர்கள் முயற்சிக்கின்றனர்.
எனினும் உடலில் கலந்த விஷம் என்னவென்பது தொடர்பில் அறியாததன் காரணமாக அவர்களுக்குரிய சிகிச்சைகளை உடனடியாக வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர்கள் உயிரிழப்பதாகத் தேசிய வைத்தியசாலையின் விஷ தகவல் நிலையத்தின் பிரதானி வைத்தியர் ரவி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇